குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டி : வாள்வீச்சு பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்

Oct 1 2022 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியின் வாள்வீச்சு பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

குஜராத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருன்றன. நேற்று நடைபெற்ற மகளிருக்கான சேபர் பிரிவு வாள்வீச்சு பிரிவில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். இந்தப் பிரிவில் ஏற்கெனவே தொடர்ச்சியாக இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்ற பவானி தேவி இம்முறையும் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பவானி தேவி, பஞ்சாப் வீராங்கனை ஜகமீத் கவுரை எதிர்த்து விளையாடினார். தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய பவானி தேவி 15-3 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அத்துடன் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00