IPL தொடரில் பங்கேற்கும் இந்திய வீரரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கக் கூடாது - BCCI புதிய கட்டுப்பாடு
Aug 13 2022 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வீரர்கள், வெளிநாட்டு 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கவோ, ஆலோசனை வழங்கவோ கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
வர்த்தக ரீதியாக பெருமளவில் வெற்றி பெற்ற ஐபிஎல் தொடரை போன்று வெளிநாடுகளில் 20 ஓவர் தொடர்கள் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல் உரிமையாளர்களில் பலர் வெளிநாடுகளில் நடத்தப்படும் 20 ஓவர் போட்டி அணிகளில் முதலீடு செய்துள்ளதுடன், ஐபிஎல்லில் தங்களது அணியில் ஆடும் வீரர்களை இந்த தொடர்களில் விளையாட வைக்க முடிவு செய்துள்ளனர். இதனிடையே, அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை உள்நாட்டு வீரர்கள் உள்பட எந்த ஒரு இந்திய வீரரும் வேறு எந்த லீக் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அப்படி விளையாட விரும்பும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்துடனான அனைத்து ஒப்பந்தங்களை முறித்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல வெளிநாட்டில் நடைபெறும் 20 ஓவர் லீக்கில் அணிகளின் ஆலோசகராக செயல்படவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.