ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்

Aug 12 2022 7:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்‍கெட் அணி, ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த ஜூலை 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுலின் தற்போது முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00