இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல கேட்சுகளை தவறவிட்டவர் - பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப்-ன் விமர்சனத்தால் புதிய சர்ச்சை

Aug 11 2022 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டவர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தோனி 256 கேட்ச் மற்றும் 38 ஸ்டம்பிங் என மொத்தம் 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 321 கேட்ச் மற்றும் 123 ஸ்டம்பிங் என மொத்தம் 444 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் தோனி மூன்றாவது சிறந்த விக்கெட் வீக்கெட் கீப்பராகவும், டெஸ்ட் போட்டிகளில் ஐந்தாவது சிறந்த விக்கெட் கீப்பராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார். தோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார் என்றும், இது பெரிய எண்ணிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் குயின்டன் டி காக் சிறந்தவர் என்றும், அவர் மூன்று வடிவங்களிலும் கீப்பிங் மற்றும் பேட்டிங் நன்றாக செய்தார் என்றும் ரஷீத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00