மாஸ்டர் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா - 3 மாதங்களுக்‍குள் இரண்டாவது முறையாக வென்று​புதிய சாதனை

May 21 2022 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாஸ்டர் செஸ் தொடரில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான Magnus Carlsen-ஐ இரண்டாவது முறையாக தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.

Chessable Master தொடர் நவம்பர் வரை 9 தொடர்களாக நடைபெற உள்ளது. இதுவரை 3 தொடர்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 4வது தொடரின் ஐந்தாவது சுற்றில் உலக சாம்பியன் மேக்‍னஸ் கார்ல்சனை, 16 வயதான இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். தற்போது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், ஆன்லைன் முறையில் விளையாடிய பிரக்‍ஞானந்தா, தனது அதிரடி நகர்வுகள் மூலம் கார்ல்சனை தோற்கடித்தார். ஏற்கெனவே கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை, பிரக்‍ஞானந்தா தோற்கடித்திருந்தார். இதன்மூலம் 3 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்து பிரக்‍ஞானந்தா புதிய சாதனை படைத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00