ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம் - முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதல்

Apr 8 2021 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
விளையாட்டு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை பெங்களூருவை சந்திக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் இந்த முறையும் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த முறை ஐக்கிய அரபு அமிரகத்துக்கு மாற்றப்பட்ட இந்தப்போட்டி, இந்த முறை இந்தியாவிலேயே நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், வீராட் கோலியின் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் உள்ளிட்ட 8 களம் இறங்குகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸும் மோதுகின்றன. கொரோனா அச்சம் காரணமாக இத்தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00