குலசேகரபட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழா - நள்ளிரவில் நடைபெற்ற மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்பு

Oct 9 2019 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் முத்தராமன் கோயில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயிலில், தசரா திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்‍கிய நிகழ்ச்சியாக, மகிஷா சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதற்காக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிம்ம வாகனத்தில் கோயில் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்ருளினார். அங்கு மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பகதர்கள் கலந்து கொண்டனர்.

மகிஷா சூரசம்ஹாரம் முடிந்ததும், வேடமணிந்து விரதம் இருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தினை முடித்து கொண்டனர். மகிஷாசூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்‍கப்பட்டன.

இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் விஜயதசமி நிறைவு விழாவை முன்னிட்டு, அம்பு, வில் சகிதமாக முத்துக்குமாரசுவாமி புறப்பாடு மற்றும் மற்றும் மகிஷாசுர வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோயில், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் மற்றும் அருள்மிகு பெருமாள் கோயில்களில் இரவு சம்ப்ரோக்‍ஷண பூஜைகள் நடத்தப்பட்டு அர்த்தஜாம பூஜை நடைபெற்றது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்‍கோயிலில், மஹிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதனைக்‍ காண ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர். வதம் செய்யும் நிகழ்ச்சியை பார்த்து ரசித்ததுடன், சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00