தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

Sep 9 2019 9:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்ஸ்தலமாக விளங்குவதும், 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததுமான திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் முன்செல்ல, ஜம்புகேஸ்வரர் வெள்ளி குதிரையிலும், அம்பாள் மரக்கேடயத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

திருச்சி மாவட்டம் பிக்சாண்டார்கோயில் பகுதியில் அமைந்துள்ள உத்தமர்கோயில் புனரமைக்கப்பட்டு வரும் 11 ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கொள்ளிடம் தென்கரையிலிருந்து நித்யாராதனம், பகவத்பிரார்த்தனை, ஸங்கல்பம், பூன்யாஹ வாசனம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைப்பெற்று, பக்தரகள் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் மற்றும் காரைக்கால் கயிலாசநாதர், ஸ்ரீநித்திய கல்யாண பெருமாள் தேவஸ்தானம் இணைந்து நடத்திய வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம், காரைக்கால் அம்மையார் ஆலய தெப்பக்குளத்தின் அருகில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திருப்பதி வெங்கடேச பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராய், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, சுப்ரபாத சேவை, விஷ்ணுசகஸ்ரநாம வழிபாடு, வேதபாராயணம் ஆகியவை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப்பிறகு மஹாதீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00