வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழா தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்

Aug 31 2019 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து, 10 நாட்கள் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நேற்று சப்பர பவனி எனப்படும் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக புதுக்கோட்டை மறைவட்ட ஆயர் சவரிமுத்து அடிகளார் தலைமையில் நவநாள் திருப்பலிகள், கூட்டுப்பிராத்தனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், சூசையப்பர், சவேரியார், ஆரோக்கியமாதா ஆகிய 5 சொரூபங்களை, பெண்கள் தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தூய அன்னை வேளாங்கண்ணி கிறிஸ்தவ ஆலயத்தில், 11-ம் ஆண்டு ஆசீர்வாத பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆயிரக்‍கணக்‍கான கிறிஸ்தவர்கள் மேளதாளங்களோடு, அன்னை வேளாங்கண்ணி கொடியுடன் ஊர்வலம் வந்தனர். பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் அன்னை மரியாள் உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தனர். விழாவை முன்னிட்டு தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயம், வண்ண விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பூண்டி மாதா அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான மின்சார தேர் பவனி, வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00