நாகை வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப்பெருவிழா கோலாகலத் தொடக்‍கம் - கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று சிறப்பு ஆராதனை

Aug 29 2019 8:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் புனித வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்துள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய வேளாங்கண்ணி பேராலயத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள ஆண்டுப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். பின்னர் சிறப்புத்திருப்பலியும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொடி உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடியேற்று நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களும் நவநாள் ஜெபம், கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசிர் மற்றும் பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நடைபெறவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00