மயிலாடுதுறை பல்லவராயன் பேட்டையில் விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய தேரோட்ட திருவிழா : திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
Sep 26 2023 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன் பேட்டையில் புகழ் பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேரில் எழுந்தருள மகாதீபாரதனை காட்டப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வரும்போது, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வாசல்களில் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.