திருப்பதி பிரமோற்சவ நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோலாகலம் : ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி சாமி தரிசனம்
Sep 26 2023 10:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி பிரமோற்சவ நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவின் 8ம் நாளான நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி சாமி தரிசனம் மேற்கொண்டனர்.