திருப்பதி திருமலையில் வெகுவிமர்சியாக நடைபெற்ற புரட்டாசி பிரம்மோற்சவ தேரோட்டம் : மாட வீதிகளில் திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம்
Sep 25 2023 10:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி கோஷங்கள் முழுங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.