திருப்பதி பிரமோற்சவத்தின் 7ஆம் நாள் உற்சவம் கோலாகலம் : சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
Sep 24 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி பிரமோற்சவத்தின் 7ம் நாளான இன்று சூரியபிரபை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரமோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவத்தில் சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4 மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த சுவாமியை பக்தி கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.