கும்பகோணம் அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் வெங்கடாசலபதி : திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டு மனமுருக பிரார்த்தனை
Sep 23 2023 5:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் என அழைக்கப்படும் வெங்கடாசலபதி திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, மூலவர் வெங்கடாசலபதி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் காத்திருந்து மூலவர் வெங்கடாசலபதி பெருமாளையும், உற்சவர் பொன்னப்பர், பூமிதேவி தாயாரையும் வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.