கடலூர் அருகே தேவநாத சுவாமி திருக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் : திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Sep 23 2023 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோவிலில், புராட்டாசி சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் சுவாமியை கருடாழ்வார் அருகிலேயே வைத்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூத்தவராக தேவநாதசுவாமி கருதப்படுவதால், திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவது ஐதீகம் என்பதால், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.