திருப்பதி பிரமோற்சவத்தின் 6ம் நாள் விழா கோலாகலம் : ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்
Sep 23 2023 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி பிரமோற்சவத்தின் 6ம் நாளான இன்று ஹனுமந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பிரமோற்சவத்தின் ஆறாம் நாள் உற்சவத்தில் ஹனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4 மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த சுவாமியை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.