புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
Sep 23 2023 9:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி சிறப்பு உண்டு. இது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. அந்த வகையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை முதலே பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.