தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம், கும்பாபிஷேகம் : திரளான பக்‍தர்கள் சுவாமி தரிசனம்

Jun 8 2023 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்‍கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பில்லாவெழி மலை கிராமத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் 68வது ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அலகு குத்திய பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விரதமிருந்த பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில் மலை கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் தேரோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்‍கப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி, தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. கனகவல்லி தாயாருடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருள, திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்‍தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீழ ராஜவீதி அருகே உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பொதுமக்‍கள் கண்டு மகிழ்ந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே காரப்பிடாகையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கிலிவீரன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபுரக்கலசத்தின் மீது ஊற்றி குடமுழுக்‍கு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பக்‍தர்கள் மீது புனித நீர் தெளிக்‍கப்பட்டது.

திருவண்ணாமலையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில், சேலம் காட்டூரில் உள்ள பால தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை நகர் பகுதியில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்ச பாண்டவர் சமேத ஸ்ரீ மேட்டு திரௌபதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகிளிப்பட்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வானில் கருட பகவான் வட்டமிட்டதை அடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி, கலசத்துக்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் காட்டூரில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயிலில் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் புனித தீர்த்தம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து, நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே சத்திரம் கொடிக்குளத்தில் உள்ள பொன்னி அம்மன் கோயிலில் அஷ்ட பந்தன நூதன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் சத்திரம் கொடிக்குளம் கிராம சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நைனார்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரய்யா கோயிலில் மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த விழாவை காண திரளான பக்தர்கள் குவிந்தனர்.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகேந்திரகிரி நாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00