மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு
Dec 1 2022 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கார்த்திகை உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுந்தரேசுவரர் - மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க தீபாராதனை அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வரும் 6ம் தேதி தீபதிருநாளை முன்னிட்டு பொற்றாமரைக்குளம், அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் லட்சத்தீபம் ஏற்றப்பட உள்ளது.