அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 4ஆம் நாள் விழா : அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
Dec 1 2022 9:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாள் இரவு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவில் காலை மற்றும் இரவு வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.