திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்-லைன் டிக்கெட் சேவை : பக்தர்கள் கோரிக்கை அடுத்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை
Nov 30 2022 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்-லைன் மூலம் அபிஷேகம், சேவா முன்பதிவுகள் துவங்கியுள்ளது. ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியன் சுவாமி கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் பக்தர்கள் வசதிக்காக மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம், வெள்ளித்தேர், கேடய உற்சவம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அனைத்து சேவைகள், அபிஷேகம் கடந்தாண்டு வரை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில், பக்தர்களின் கோரிக்கையை அடுத்து கோவில் நிர்வாகம் மீண்டும் ஆன்-லைன் வாயிலாக அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.