திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் காலை உற்சவம் : விநாயகர் மற்றும் சந்திரசேகர் பூத வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா
Nov 29 2022 5:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் காலை உற்சவத்தில், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் பூத வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற்றது. பின்னர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகரருக்கு பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்று நான்கு மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.