திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வார இறுதி விடுமுறை நாளையொட்டி குவியும் பக்தர்கள் கூட்டம் - 20 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்
Jun 25 2022 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால், கூட்டம் அலைமோதுவதால், ஏழுமலையானை 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று, திருமலையில் வைகுண்டம் காம்பளக்ஸ்களில் உள்ள 32 அறைகளும் நிரம்பி, வெளியே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க 20 மணி நேரம் ஆனது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால், தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். திருமலையில் சிஆர்ஓ அலுவலகம், பஸ் நிலையம் என எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
தினமும் தற்போது சராசரியாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். ஏறக்குறைய நாள்தோறும் ஒன்றரை லட்சம் பேருக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பால், குடிநீர், உணவு போன்றவை வழங்கப்படுகிறது.