திருவாரூர் வெள்ளக்குடியில் பழமைவாய்ந்த ஸ்ரீமகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Jun 23 2022 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் பழமைவாய்ந்த ஸ்ரீமகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், சுத்தாநல்லூர் வட்டம், வெள்ளக்குடி பகுதியில் அமைந்துள்ள மகா காளியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவையொட்டி,விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இவ்விழாவில், திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர் திரு. எஸ். காமராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சிவசைலம் கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு உள்ள கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் சன்னிதானம் திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாசர் பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டனர்.