காரைக்‍ககாலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

May 21 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி மாநிலம் காரைக்‍ககாலில் பிரசித்திபெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில், ஆயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் சன்னிதானம் அமைந்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திரளான பக்‍தர்கள் வருகை தந்துள்ளனர். பக்‍தர்கள் அதிக அளவில் வருகையால் அதிகாலை 4.30 மணிக்‍கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்‍கப்பட்டனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் புனித நீராடி, கோயிலில் எள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பழமைவாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரௌபதி அம்மன் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் அமர்ந்தபடி காட்சி அளித்தார். சுவாமியின் முன்பு அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். குழந்தைகளை தோளில் அமர வைத்தும் பக்‍தர்கள் சிலர் நேர்த்திக்‍கடன் செலுத்தினர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, பழமைவாய்ந்த வேதநாராயண பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருத்தேரில் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00