70 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புதுக்கோட்டை ஆண்டியப்பா ஐயனார் கோவில் தேரோட்டம் - ஹெலிகாப்டர் மூலம் வானில் மலர்தூவி உற்சாகம்

May 21 2022 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டியப்பா ஐயனார் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு வைர தேரோட்டம் வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஆண்டியப்ப ஐயனார் கோவில் வைர தேரோட்டம் 70 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தேர் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைர தேரோட்டம் நடைபெற்றது. இந்த வைர தேரோட்டத்தை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வானிலிருந்து மலர் தூவ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வைரத் தேரோட்டம் நடைபெற்ற பொழுது, ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவி பின்னர் வைர தேரோட்டத்தை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆரவாரத்துடன் தேரை வடம் பிடித்து கோவிலைச் சுற்றி தேரை இழுத்து வந்தனர். அப்போது, தெற்கு வீதியில் வைரத்தேர் வந்தபோது அதன் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா உள்ளிட்ட மலர்களை மக்கள் தூவி உற்சாகமாக கொண்டாடினர். தேரோட்டத்திற்கு முன்னதாக பாரம்பரிய முறைப்படி குதிரை, யானை, செண்டை மேளம் மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட அறநிலைத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00