தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாள் கொண்டாட்டம் - புகழ்பெற்ற வடலூர் சத்தியஞான சபையில் நடைபெறும் ஜோதி தரிசன விழா

Jan 18 2022 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 151 வது ஜோதி தரிசன விழா, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்படி இன்று காலை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் 1871 ஆம் ஆண்டு சத்திய ஞான சபையை நிறுவினார். தைப்பூச நாளன்று பூசம் நட்சத்திரத்தில் ஜோதி தரிசனப் பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இன்று 151 ஆம் ஆண்டு ஜோதி தரிசன விழா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது கருப்பு நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை மற்றும் கலப்புத் திரை ஆகிய 7 திரைகளை நீக்‍கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது, அங்கு குவிந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் திரளானோர், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் கண்டனர்.

பின்னர் தொடர்ந்து காலை 10 மணிக்கும், நண்பகல் 1 மணிக்கும், இரவு 7 மணிக்கும், இரவு 10 மணிக்கும், நாளை காலை 5.30 மணிக்கும் என 6 காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் படவில்லை. வடலூர் பார்வதிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டுமே குறைந்த அளவில் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00