சபரிமலையில் நடைபெறும் படிபூஜை மற்றும் உதயஸ்தமன பூஜை : படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2036-ம் ஆண்டு வரை நிறைவு

Dec 8 2021 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
சபரிமலை ஐய்யப்பன் கோயில் படி பூஜைக்‍கான முன்பதிவு 2036-ம் ஆண்டு வரையும், உதயஸ்தமன பூஜைக்‍கான முன்பதிவு வரும் 2028 வரை முடிந்து விட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சபரிமலையில் தினமும் மாலை தீபாராதனை முடிந்ததும் 18 படிகள் சுத்தம் செய்யப்பட்டு ஒவ்வொரு படியிலும் பட்டு விரித்து அதில் தேங்காய் வைத்து பூமாலை அணிவித்து விளக்கு ஏற்றப்படும். தொடர்ந்து தந்திரிகள் பூஜை நடத்துவார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறும். பூஜைகள் செய்த பின்னர் கலச நீர் 18- வது படியில் இருந்து ஊற்றப்பட்டு, படிகளுக்கு தீபாராதனை நடைபெறும். இதற்கு கட்டணம் 75 ஆயிரம் ரூபாயாகும். இதற்கான முன்பதிவு வரும் 2036 வரை முன்பதிவு முடிந்துள்ளது.

இதேபோல், கோயில் நடை காலை ​திறக்‍கப்பட்டு, நிர்மால்யதரிசனம் முதல் இரவு அத்தாழ பூஜை வரை ஐயப்பன் சன்னதியில் நடைபெறுவது உதயாஸ்தமன பூஜையாகும். இந்த பூஜைக்காக பதிவு செய்தவர்கள், நாள் முழுவதும் எல்லா பூஜைகளின்போதும் முன்வரிசையில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும். இதற்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாகும். இதற்கான முன்பதிவு வரும் 2028 வரை முடிந்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00