திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிப்பு - பெளர்ணமி சிறப்பு வழிபாடுகள் கோயிலில் வழக்கம்போல் நடைபெறும்

Sep 18 2021 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புரட்டாசி மாத பௌர்ணமி, வரும் 20ஆம் தேதி திங்கட்கிழமை காலை 5.20 மணிக்கு தொடங்கி, 21ஆம் தேதி காலை 5.51 மணிக்கு நிறைவு பெறுவதாக, திருவண்ணாமலை திருக்கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த 2 தினங்களும் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால், 20, 21 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் திரு. முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளையில், பெளர்ணமி சிறப்பு வழிபாடுகள் மட்டும், திருக்கோயிலில் வழக்கம்போல் நடைபெறும் என்றும், தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் இருக்க கிரிவல பாதையில் தடுப்புகள் அமைக்கப்படும் எனவும், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, திருவண்ணாமலை திருக்கோயிலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிரிவலத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00