கோலாகலமாக நடைபெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை - அலங்கரிக்கப்பட்ட தேரில் பாலபத்ரா சாமியை தரிசித்த பக்தர்கள் பரவசம்

Jun 23 2020 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒடிசா மாநிலம் புரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவிலின் ரத யாத்திரை, பக்‍தர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.

புரியில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஜெகன்னாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரையில், உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, ரத யாத்திரை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக, கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. ரத யாத்திரையை அனுமதித்தால், ஜெகன்னாதர் தங்களை மன்னிக்க மாட்டார் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, உச்சநீதிமன்ற நீதிபதி திரு. அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது முறையிட்ட மத்திய அரசு தலைமை வழக்‍கறிஞர் திரு. Tushar Mehta, ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் ரத யாத்திரை‌‌யை நிறுத்தினால், அடுத்த 12 ஆண்டுகளுக்கு ரத யாத்திரையை நடத்த இயலாது என்ற பாரம்பரிய நம்பிக்கையை பக்‍தர்கள் கொண்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, ரத யாத்திரையை பக்தர்கள் இன்றி அனுமதிக்‍க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய அரசின் இந்த நிலைபாட்டிற்கு ஒடிசா அரசும் ஆதரவு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ரத யாத்திரைக்கான தடையை தளர்த்துவது குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பக்தர்களுக்கு அனுமதி அளிக்காமல் ரத யாத்திரையை நடத்த அனுமதி அளித்தது. இதனையடுத்து, ஜெகன்னாதர் கோவிலின் ரத யாத்திரை, பக்‍தர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00