சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு : 144 தடை உத்தரவு காரணமாக வெறிச்சோடிய கோயில்கள்

Apr 14 2020 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதால், வழக்கமாக அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயில்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

சித்திரை மாதத்தின் முதல் நாளான இன்று, இனி வரும் நாட்கள் இனிதாக துவங்க வேண்டும் என்பதற்காக முருகன் கோயில், ஐயப்பன் கோயில் என தங்களுக்கு விருப்பமான கடவுள்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டிருப்பதால் கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், வடபழனி முருகன் கோயில் ஆகிய கோயில்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மக்கள் இல்லாமல் நடைபெற்றது. மேலும் கோவில்கள் திறக்காததால் பக்தர்கள் ஆங்காங்கே ஆலயத்தின் வாசலில் நின்றபடி தரிசித்து சென்றனர்.

தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒவ்வொரு வருடமும் கோவிலுக்கு வரும் தாங்கள் இந்த வருடம் குடும்பத்துடன் வர முடியாமல் போனது வருத்தமளித்தாலும் அனைவரது நலனிற்காக அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவிற்கு ஒத்துழைப்பு தந்து வீட்டில் இருந்தபடியே பூஜை செய்ததாகவும், தமிழ் புத்தாண்டன்று கோவில் கோபுரத்தையாவது தரிசித்து செல்ல வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

சித்திரை 1-ம் தேதியான இன்று, தமிழ்நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர் மலேசியா இலங்கை போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கொண்டாடும் திருநாள். இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்க வேண்டும், குறிப்பாக விவசாயம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தஞ்சை பெரியகோவிலுக்கு காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் முழுமையாக அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இல்லாமல் தஞ்சை பெரிய கோவில் மற்றும் பெரிய கோவில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00