ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியா : பாரம்பரியச் சின்னங்களில் ஜி-20 லோகோவால் அலங்காரம்
Dec 2 2022 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் செய்த பாரம்பரியச் சின்னங்கள் உள்ளிட்ட 100 இடங்கள் ஒரு வார காலத்துக்கு ஜி 20 லோகோவுடன் கூடிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றுள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தின் மாமல்லபுரம், டெல்லி செங்கோட்டை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் உள்ளிட்ட 100 இடங்களில் ஜி20 லோகோவுடன் கூடிய விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ள இந்திய அகழ்வாராய்ச்சித் துறை, உலக அளவில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதையே இது காட்டுகிறது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.