குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிரொலி - வடகிழக்‍கு மாநிலங்களில் தொடரும் போராட்டங்களால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து

Dec 13 2019 7:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வடகிழக்‍கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்புக்‍கு இடையே, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நடைமுறைக்‍கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம், நாகாலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில், பிரதமர் திரு. மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு நடைபெற இருந்தது. இரு தலைவர்களும், வரும் 17-ம் தேதி மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, இரண்டாம் உலகப்போரில் உயிர்நீத்த ஜப்பான் வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. ஆனால், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாமில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், ஜப்பான் பிரதமர் அபேயின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளின் பிரதமர்கள் சந்திப்பு தற்சமயத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00