நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உடனடியாக நிறைவேற்றக்‍ கோரி தொடரப்பட்ட வழக்‍கு - வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம்

Dec 13 2019 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி மாணவி நிர்பயா கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் தண்டனையை உடனடியாக வழங்கக்கோரி, மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை, டெல்லி நீதிமன்றம் வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

டெல்லி மாணவி நிர்பயா, பாலியல் வன்கொடுமை வழக்‍கில் தூக்‍கு தண்டனை விதிக்‍கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவனான அக்‍ஷய் சிங், தனக்‍கு விதிக்‍கப்பட்டுள்ள மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்‍கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 17-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே, குற்றவாளிகளின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றாக்கோரி, நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.சதீஷ் அரோரா, அக்சய் சிங்கின் சீராய்வு மனுவில், உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை காத்திருக்க வேண்டுமெனக் கூறி, விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, 7 வருடங்களாக காத்திருந்த தாங்கள் மேலும் ஒரு வாரம் காத்திருப்போம் எனவும், டிசம்பர் 18-ம் தேதி, குற்றவாளிகளுக்கு நிச்சயம் மரண தண்டனை கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00