மஹாராஷ்ட்ர அரசு விளம்பரங்களில் பிரதமர் மோதியின் புகைப்படம் அகற்றம் - மாநில அரசு மீது பா.ஜ.க. புகார்

Dec 13 2019 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா மாநில அரசு விளம்பரங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோதியின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்ட்ராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்தது கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதலமைச்சராக சிவசேனா தலைவர் திரு.உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சிவசேனா தலைமையிலான ஆட்சியில், மாஹாராஷ்ட்ரா மாநில அரசு விளம்பரங்களில், பிரதமர் திரு. மோதியின் புகைப்படம் அகற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மஹாராஷ்ட்ர பா.ஜ.க. மாநில துணை தலைவர் திரு. பிரசாத், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍ரேவுக்‍கு கடிதம் எழுதியுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றது முதல், அரசு விளம்பரங்களில் பிரதமர் மோதியின் படம் இடம் பெறாமல் இருப்பதாகவும், மாநில அரசு விளம்பரங்களில் பிரதமர் மோதியின் படம் இடம் பெறலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை மீறி உள்நோக்கத்துடன் பிரதமர் மோதியின் புகைப்படத்தை அகற்றியது சரியல்ல என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00