கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை - நானாவதி விசாரணை ஆணையம் தகவல்

Dec 11 2019 7:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடைபெற்ற குஜராத் கலவரத்தில் மோதிக்கு தொடர்பில்லை என நானாவதி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் கோத்ரா பகுதியில் 2002-ம் ஆண்டு நடைபெற்ற மத கலவரத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையில், விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து, அப்போதைய குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த கலவரம் தொடர்பான நானாவதி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை, குஜராத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரங்கள் மாநில அரசின் தூண்டுதல் காரணமாக நடக்கவில்லை என்றும், ரயில் எரிப்புக்கு பின் நடைபெற்ற கலவரம் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய முதலமைச்சர் திரு.மோதி கலவரத்தை தூண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரே தவறிவிட்டதாகவும், அதனால் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை 2014-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00