வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் - 10 செயற்கைக்‍கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Dec 11 2019 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. வகையை சேர்ந்த 50-வது ராக்‍கெட்டான, பி.எஸ்.எல்.வி. சி-48, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

புவி கண்காணிப்பு, நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல், உள்ளிட்ட ஆய்வுகளுக்‍காக, ரீசாட் 2-பி.ஆர்1 என்ற செயற்கைகோளை இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்‍கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்திய செயற்கைக்‍கோளுடன், இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைக்‍கோளும், அமெரிக்காவின் 6 செயற்கைக்‍கோள்களும், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்‍கெட், இஸ்ரோவின் 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்‍கெட் என்பது குறிப்பிடத்தக்‍கது.



இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்‍கெட் மூலம் ஏவப்பட்ட 10 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்தார். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 75-வது ராக்‍கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு துணையாக இருந்த அனைவருக்‍கும் நன்றியை தெரிவித்துக்‍கொள்வதாகவும் திரு. சிவன் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00