குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்புக்‍கு ஏற்பட்ட கருப்பு தினம் என காங்கிரஸ் கண்டனம் - வடகிழக்கு மாநில மக்கள்தொகை கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என்றும் கருத்து

Dec 10 2019 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்‍களவையில் நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்புக்‍கு ஏற்பட்ட கருப்பு தினம் என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்‍களவையில் நிறைவேற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சசிதரூர், இன்றைய தினம் அரசியலமைப்புக்‍கு கருப்பு தினம் என்றும், மக்‍களவையில் நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். இச்சட்டம், இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரானது என்றும், மிகவும் வெட்கக்‍கேடானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அசாம் மாநிலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரம், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.தருண் கோகோய் தெரிவித்துள்ளார். கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வடகிழக்கு மாநில மக்கள்தொகை கட்டமைப்பை சீர்குலைத்துவிடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00