கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உன்னாவ் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட கொடூர சம்பவம் - வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக உத்தரபிரதேச முதலமைச்சர் அறிவிப்பு

Dec 7 2019 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்மணி, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த ஒருசிறுமி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 2 நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அப்பெண் அளித்த புகாரின் பேரில், கடந்த மார்ச் மாதம் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த 30 ஆம் தேதி ஜாமினில் அவர்கள் இருவரும் வெளியே வந்தனர். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம், பாதிக்கப்பட்ட பெண் விசாரணைக்‍காக ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த ஒரு கும்பல், அப்பெண்ணை தாக்‍கியதுடன், அவர் மீது தீ வைத்தது. பலத்த தீக்காயங்களுடன் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தனக்கு மனவேதனை அளிப்பதாக கூறியுள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இவ்வழக்கு தொடர்பான விசாரணை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00