உன்னாவ் பெண் தீ வைத்து எரிக்‍கப்பட்ட விவகாரம் : நாடாளுமன்றத்தில் எதிர்க்‍கட்சிகள் அமளி - வெளிநடப்பு

Dec 6 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளான பெண், தீ வைத்து எரிக்‍கப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ஒருபுறம் ராமர் கோயில் கட்டும் இந்நாட்டில், மறுபுறம் சீதைகள் தீ வைத்து எரிக்‍கப்படுவதாக காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது.

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நேற்று காலை ரேபரேலியில் நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, ஜாமினில் வெளியே வந்த 2 பேர், சிலருடன் சேர்ந்து, அவரை வழிமறித்து தீயிட்டு கொளுத்தினர். இதில் 90 சதவீதம் தீக்‍காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்‍கு ஆபத்தான நிலையில் சுய நினைவின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பட்டது. நாட்டில் பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகவும், உன்னாவ் பெண் தீ வைத்து எரிக்‍கட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், இரு அவைகளிலும் எதிர்க்‍கட்சிகள் கூச்சலிட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பும் செய்தன.

மக்‍களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. திரு. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒருபுறம் ராமர் கோயில் கட்டும் இந்நாட்டில், மறுபுறம் சீதைகள் தீ வைத்து எரிக்‍கப்படுவதாக கடுமையாக விமர்சித்தார். குற்றவாளிகள் தைரியமாக வெளியில் நடமாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00