உத்தரப்பிரதேசம், டெல்லியில் பாலியல் குற்றம் தொடர்பான சம்பவங்களில் அரசுகள் மெத்தனம் - தெலங்கானா காவல்துறையை பின்பற்றி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கருத்து

Dec 6 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்‍கு எதிராக, தெலங்கானா போலீசார் போன்று பிற மாநில போலீசாரும் செயல்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே இடத்தில் வைத்தே, குற்றவாளிகள் நால்வரும் சுட்டுக்‍கொல்லப்பட்டனர். இதனை வரவேற்றுள்ள பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி, தெலங்கானா போலீசார் போன்று பிற மாநில போலீசாரும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், மாநில அரசு தூங்குவதாகவும், குற்றவாளிகள் விருந்தாளிகள் போல நடத்தப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். தெலங்கானா போலீசார் போன்று, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி போலீசார் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் செல்வி மாயாவதி தெரிவித்துள்ளார்.

தெலங்கானா என்கவுண்டர் சம்பவத்தை ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் திரு. லாலு பிரசாத் யாதவின் மனைவி திருமதி ராப்ரி தேவியும் வரவேற்றுள்ளார். பீகாரில், பெண்களுக்‍கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கடுமையான நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00