பாபர் மசூதி இடிக்‍கப்பட்ட சம்பவத்தின் 27-வது ஆண்டு தினம் இன்று அனுசரிப்பு : நாடு முழுவதும் பலத்த பதுகாப்பு - அயோத்தியில் பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிப்பு

Dec 6 2019 8:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாபர் மசூதி இடிக்‍கப்பட்ட சம்பவத்தின் 27-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்‍கப்படுவதை யொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்‍கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்‍குரிய இடத்தில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி இடிக்‍கப்பட்டது. இச்சம்பவத்தின் 27-வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்‍கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலைகளில் பல்வேறு இடங்களிலும், சாலைத்தடுப்புகள் மற்றும் சோதனைச் சாவடிகள் அமைக்‍கப்பட்டு, வாகனங்கள் கடுமையான சோதனைகளுக்‍கு உள்ளாக்‍கப்படுகின்றன. அயோத்தி முழுவதும் கண்காணிப்பு கேமராக்‍கள் பொருத்தப்பட்டு, அனைவரின் நடமாட்டமும் தீவிரமாக கண்காணிக்‍கப்படுகிறது. ஆங்காங்கே மணல் மூட்டைகள் பெருமளவில் அடுக்‍கி வைக்‍கப்பட்டு, அவற்றைச் சுற்றிலும் எந்திரத் துப்பாக்‍கிகளுடன் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமானவை என கருதப்படும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடும் நபர்களை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது. அதிவிரைவுப் படையினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் படையினர் அயோத்தி முழுவதும் குவிக்‍கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே தற்காலிக சிறைச்சாலைகளும் அமைக்‍கப்பட்டுள்ளன. அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், இதர தங்கும் இடங்களில் அதிரடிப் படை போலீசார் தீவிர சோதனை நடவடிக்‍கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00