தட்டுப்பாட்டை சமாளிக்க, எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து, 21 ஆயிரம் டன் வெங்காய இறக்குமதிக்‍கு அனுமதி : உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

Dec 6 2019 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெங்காய விலை உயர்வு குறித்து டெல்லி நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து, நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் திரு.பியூஷ் கோயல், திரு.நரேந்திரசிங் Thomar (தோமர்), அமைச்சரவை செயலர் திரு.ராஜீவ் gauba(கவுபா), பிரதமரின் ஆலோசகர் பி.கே.சின்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்க, ஆப்பிரிக்க நாடான எகிப்து, மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இருந்து, 21 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வெங்காயம் விலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவத்துடன் பதிலளித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்துவரும் நேரத்தில், அதற்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு, தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என அலட்சியமாக பதிலளித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். நிதியமைச்சருக்கு இந்த பிரச்சினையை கையாளவும், தீர்வுகாணவும் திறமையில்லை என்பதே உண்மை எனவும் விமர்சித்துள்ளார்.

இதேபோல், சைவ உணவு சாப்பிடுவதால், வெங்காயத்தின் வி‌லை குறித்து தனக்கு தெரியாது என்று பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் choubey (சவுபே) கூறியது சர்ச்சை‌யை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், வெங்காயம் விலை உயர்வு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தான் சைவ உணவு சாப்பிடுவத‌ால், வெங்காயத்தை ஒருபோதும் சாப்பிட்டதில்லை என்றும், தன்னைப் போன்ற நபர்களுக்கு வெங்காயத்தின் விலை நிலவரம் பற்றி எப்படி தெரியும் என்றும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00