கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் : 66 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவு : வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணிக்‍கை

Dec 6 2019 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில், 15 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவில், 66 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 17 இடங்களில் 15 தொகுதிகளுக்‍கு இடைத்தேர்தல் அறிவிக்‍கப்பட்டது. சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், விஜயநகரா, அத்தானி உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்‍குப்பதிவு நேற்று காலை 7 மணிக்‍கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற்றது. இறுதியில், 66 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வரும் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தற்போது கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு கவிழாமல் இருக்க வேண்டுமானால், குறைந்த பட்சம் 6 தொகுதிகளில், அக்கட்சி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால், தேர்தல் முடிவுகள், அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00