மாற்றங்களை ஏற்று அதற்கேற்ப பயணிக்க வேண்டும் - மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை ஒட்டி பிரதமர் உரை
Nov 18 2019 9:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரையொட்டி உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சிறப்பை மாநிலங்களவை பிரதிபலிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவையின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, இன்று 250-வது கூட்டத்தொடரை எட்டியது. இதனை முன்னிட்டு, மாநிலங்களவையின் சிறப்பை விளக்கும் 118 பக்கங்கள் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது. மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களவையின் பங்கு குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை ஆற்றினார். நாட்டை முன்னேற்றுவதில் மாநிலங்களவை எப்போதும் முக்கிய பங்காற்றி வருவதாகக் கூறிய பிரதமர், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சிறப்பை மாநிலங்களவை பிரதிபலிப்பதாக பெருமிதம் தெரிவித்தார். மாநிலங்களவையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரைகள் நினைவு கூரத்தக்கவை எனக் கூறினார். முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாது என்று பரவலாக சொல்லப்பட்ட நிலையில், முத்தலாக், ஜி.எஸ்.டி., ஜம்மு காஷ்மீர் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் திரு. மோடி நினைவு கூர்ந்தார்.