ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்

Nov 18 2019 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்‍கல் செய்யப்பட்டது. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, சிபிஐ-யும், அமலாக்‍கத்துறையும் தனித்தனியாக வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்‍கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்‍கில் ப.சிதம்பரத்திற்கு கடந்த 22-ம் தேதி, உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. எனினும், அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் அவருக்‍கு ஜாமின் வழங்கப்படவில்லை. அமலாக்‍கத்துறை வழக்‍கில், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்‍கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்‍கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவும் கடந்த 15ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சிதம்பரத்தின் திஹார் சிறைவாசம் தொடர்கதை ஆனது.

இந்நிலையில், அமலாக்‍கத்துறை தொடர்ந்த வழக்‍கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்‍கல் செய்யப்பட்டது. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. இந்த மனுவை நாளையோ அல்லது நாளை மறுநாளோ விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00