நாடாளுமன்றம் நோக்‍கி பேரணியாக சென்ற ஜே.என்.யூ. மாணவர்கள் மீது போலீசார் தடியடி - பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டதால் பதற்றம்

Nov 18 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடாளுமன்றத்தை நோக்‍கி, தடையை மீறி பேரணி சென்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார், ரத்தம் சொட்ட சொட்ட மாணவர்களை கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கல்விக் ‍கட்டணம், விடுதிக் கட்டணம் உயர்த்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகளை எதிர்த்து, மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் குறித்து ஆலோசித்த பல்கலைக்கழக கல்வி மன்றம் மற்றும் நிர்வாகக்குழு, மாணவர்களை உடனடியாக வகுப்புகளுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தது. போராட்டத்தை தொடர்ந்தால், தேர்வு எழுத தேவையான வருகை பதிவில் எந்தவித தளர்வும் வழங்கப்படமாட்டாது என்றும் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கல்வி மற்றும் விடுதி கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை நோக்‍கி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் இன்று பேரணி மேற்கொண்டனர். இதனால், நாடாளுமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டது. தடையை மீறி ஊர்வலம் சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

தடியடியில் மாணவர்களுக்‍கு ரத்த காயம் ஏற்பட்டபோதும், அவர்களை குண்டு கட்டாக வாகனத்தில் ஏற்றி, போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00