டெல்லியில் காற்றின் தரம் நாளுக்‍கு நாள் மோசமாகி வருவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் - காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைக்‍க, இடங்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசுக்‍கு உத்தரவு

Nov 15 2019 8:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் காற்றின் தரம் நாளுக்‍கு நாள் மோசமாகி வரும் சூழலில், மக்‍கள் எப்படி சுவாசிப்பார்கள் என உச்சநீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியது. நகரில் காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை அமைக்‍க, இடங்களை தேர்வு செய்யுமாறு மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டது.

டெல்லியில் காற்று தர மதிப்பீடு அளவு இன்று 600 புள்ளிகளை நெருங்கி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்‍க வாகன கட்டுப்பாடு விதிகள் அங்கு பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், காற்றுமாசு வழக்‍கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், வாகன கட்டுப்பாட்டால் டெல்லி காற்று மாசு பிரச்னையில் ஏதாவது பலன் கிடைத்ததா? என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், வாகனக்‍ கட்டுப்பாடு காரணமாக காற்று மாசுபாடு குறையாது எனத் தெரிவித்த நீதிமன்றம், கட்டுமானக்‍ கழிவுகள், பயிர் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகளே காற்று மாசுவிற்கு முக்‍கிய காரணம் எனத் தெரிவித்தனர். அவற்றை முறைப்படுத்த நடவடிக்‍கை எடுக்‍குமாறு டெல்லி அரசுக்‍கு உத்தரவிட்டனர். மேலும், டெல்லியில், காற்றை சுத்தப்படுத்தும் கோபுரங்களை எங்கெங்கு அமைக்கலாம்? என்று கேள்வியெழுப்பிய நீதிமன்றம், கோபுரங்களை அமைக்க, இடங்களை தேர்வு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00