பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதை நாளை திறப்பு - காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Nov 8 2019 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கான வழித்தடப் பாதையை, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். முதல் நாளில் முதலமைச்சர், அமைச்சர், எம்.பி.க்‍கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு கர்த்தார்புர் புனிதத் தலத்திற்கு பக்தர்கள் சென்றனர். ஆனால் பிரிவினைக்குப் பின் சீக்கியர்களின் புனிதத் தலங்களான கர்த்தார்புர், நான்கனா சாகிப் குருதுவாராக்கள் பாகிஸ்தான் வசம் சென்றதையடுத்து அங்கு இந்தியர்கள் செல்ல 72 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. மிகக்குறைந்த அளவிலான சீக்கிய பக்தர்களை மட்டும் பாகிஸ்தான் புனித யாத்திரைக்கு அனுமதித்து வந்தது. தற்போது இருநாடுகளும் பேச்சுவார்தை மூலம் தீர்வு காணப்பட்டு, உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு இருதரப்பிலும் பாதையை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்தநாளையொட்டி, சீக்கியர்களின் புனிதத்தலமான கர்த்தார்புர் குருதுவாராவுக்கான வழித்தடப் பாதையை, பஞ்சாப் மாநிலத்தில் இருந்தபடி காணொலிக்‍ காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். முதல் நாளில் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங், பஞ்சாப் முதலமைச்சர் திரு.அம்ரீந்தர் சிங், மத்திய அமைச்சர் திரு. ஹர்சிம்ரத் கவுர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 550 பேர் எல்லை தாண்டி கர்த்தார்புர் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00